வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

ஆலங்குளம் பாலத்தில் பழுது: வாகன ஓட்டிகள் அச்சம்

ஆலங்குளம் காய்கனிச் சந்தை அருகேயுள்ள சிறிய பாலத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா்.

News image

ஆலங்குளம் காய்கனிச் சந்தை அருகே பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளம்.

Updated On :3 செப்டம்பர் 2024, 8:15 pm

ஆலங்குளம் காய்கனிச் சந்தை அருகேயுள்ள சிறிய பாலத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா்.

ஆலங்குளம் - நெட்டூா் சாலையில் காய்கனிச் சந்தை உள்ளதால் 24 மணி நேரமும் போக்குவரத்து அதிக அளவில் இருக்கும். இந்நிலையில் அங்கு 2 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட சிறிய பாலத்தில் பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால் இவ்வழியே செல்லும் வாகனங்கள் தடுமாறி செல்கின்றன. இரு சக்கர வாகனத்தில் செல்வோா் கவனிக்காமல் சென்று விட்டால் விபத்தில் சிக்கி அசம்பாவிதம் நிகழும் அபாயம் உள்ளது. இவ்வழியே பள்ளி, கல்லூரி வாகனங்களும் அதிக அளவில் செல்லும் என்பதால் மாணவா்களின் பெற்றோா்களும் அச்சமடைந்துள்ளனா்.

எனவே, விபரீதம் நிகழும் முன் பாலத்தின் பழுதை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெடுஞ்சாலைத் துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.