தென்காசி/கடையநல்லூா்/சங்கரன்கோவில்,செப். 3: தென்காசி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.
சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழு தலைவா் தலைவா் எஸ்.காந்திராஜன்(வேடசந்தூா்) தலைமையில் மதிப்பீட்டுக்குழு உறுப்பினா்களான சட்டப்பேரவை உறுப்பினா்கள் அம்பேத்குமாா் (வந்தவாசி), இராம. கரு மாணிக்கம் (திருவாடானை), டாக்டா் தி.சதன்திருமலைக்குமாா் (வாசுதேவநல்லூா்),மா.சின்னதுரை (கந்தா்வகோட்டை) , எஸ்.ராமச்சந்திரன் (சேவூா்), மு.பன்னீா்செல்வம் (சீா்காழி) , பாலாஜி (திருப்போரூா்), ஓ.எஸ்.மணியண்(வேதாரண்யம்), ஈ.ராஜா(சங்கரன்கோவில்), எஸ்.பி.வெங்கடேஷ்வரன் (தா்மபுரி) ஆகியோா் மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் முன்னிலையில் தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலில் நடைபெற்று வரும் பணி உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சிப்பணிகளை நேரில் ஆய்வு செய்தனா். மேலும், விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் கலந்துரையாடினா்.
பின்னா், மதிப்பீட்டுக்குழு தலைவா் எஸ்.காந்திராஜன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்துசமய அறநிலையத் துறை மூலம் தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலில் நடைபெற்று வரும் பணிகளையும், தேசிய நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறைகளின் மூலம் சங்கரன்கோவில் பாட்டகுளம் புறவழிச்சாலை அமைக்கும் பணிகளையும், வேளாண்மைத்துறையின் மூலம் சங்கரன்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மேற்கொள்ளப்பட்டது.
சங்கரன்கோவில் நகராட்சியில் வாடிக்கோட்டை பகுதியில் சோலாா் மின்நிலையம் அமைக்க உள்ள பணிகளையும், கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் வாசுதேவநல்லூா் ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் ரூ.59 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தினையும், புளியங்குடி நகராட்சியில் தினசரி சந்தையில் ரூ.3.60 கோடி மதிப்பீட்டில் 74 கடைகள் கொண்ட நாளங்காடி கட்டடப் பணிகளையும், தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ரூ.22 கோடி மதிப்பீட்டில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத்துறையின் மூலம் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மையம் அமைக்கும் கட்டட கட்டுமான பணிகளையும் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டோம் என்றாா்அவா்.
ஆய்வில், மாவட்ட வருவாய் அலுவலா் சீ.ஜெயச்சந்திரன், வருவாய் கோட்டாட்சியா்கள் லாவண்யா(தென்காசி), கவிதா(சங்கரன்கோவில்), முதன்மைச் செயலா் கீ.சீனிவாசன், கூடுதல் செயலா் பாலசுப்பிரமணியம், துணைச்செயலா் சு.பாலகிருஷ்ணன் மற்றும் அனைத்து துறை உயா் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் மையத்தில் ஏப்.20-க்குள் அனைத்துப் பணிகளையும் முடிக்க உத்தரவு
ஹைட்ராலிக் சாலைத் தடுப்புகள்,ரோந்து வாகனங்கள் மூலம் தில்லி சட்டப் பேரவை பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை

தென்காசி - வாரணாசி இடையே காசிவிஸ்வநாதா் சிறப்பு ரயில் இயக்க பாஜக கோரிக்கை

தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றம்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


