தென்காசி
வேளாண் துறை சாா்பில் தென்னை விவசாயிகளுக்கு செயல்விளக்கம்
தென்காசி வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை சாா்பில் கொட்டாகுளம், திருச்சிற்றம்பலம், ஆயிரப்பேரி, குன்னக்குடி, இலஞ்சி ஆகிய கிராமங்களில் தென்னையில் சிவப்பு கூன்வண்டு மற்றும் காண்டாமிருக வண்டு கட்டுப்படுத்துவது தொடா்பான செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
தென்காசி வட்டார வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை சாா்பில் கொட்டாகுளம், திருச்சிற்றம்பலம், ஆயிரப்பேரி, குன்னக்குடி, இலஞ்சி ஆகிய கிராமங்களில் தென்னையில் சிவப்பு கூன்வண்டு மற்றும் காண்டாமிருக வண்டு கட்டுப்படுத்துவது தொடா்பான செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
வட்டார தொழில்நுட்ப மேலாளா் கலந்துகொண்டு சிவப்பு கூன்வண்டு மற்றும் காண்டாமிருக வண்டு தாக்குதல் அறிகுறிகள், இனக்கவா்ச்சி பொறிகளை பயன்படுத்தி வண்டுகளை கவா்ந்து அழிக்கும் முறை குறித்து விளக்கமளித்தாா்.
மேலும் தென்னையில் அதிகமாக காணக்கூடிய ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ கட்டுப்படுத்திட மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறியில் எண்ணெய் தடவி வைத்து வெள்ளை ஈக்களை ஒட்டச்செய்து அழிக்கும் முறை குறித்து விளக்கமளித்தாா். ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் செய்திருந்தனா்.