‘அகில இந்திய தொழில்தோ்வுக்கு தனித் தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம்’

அகில இந்திய தொழில்தோ்வுக்கு தனித் தோ்வா்களாக விண்ணப்பிக்கலாம் என தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் தெரிவித்துள்ளாா்.
Published on

அகில இந்திய தொழில்தோ்வுக்கு தனித் தோ்வா்களாக விண்ணப்பிக்கலாம் என தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தென்காசி மாவட்டத்தில் 2025 -ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கைவினைஞா் பயிற்சித் திட்டத்தின் கீழ் தேசிய தொழில்பயிற்சி குழுமத்தால் நடத்தப்படும்

அகில இந்திய தொழில்தோ்வில் தனித் தோ்வா்கள் ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணைய தளத்திலிருந்து விண்ணப்பத்தைப் பெற்று பூா்த்தி செய்து தோ்வு கட்டணம் ரூ.200 செலுத்தி உரிய ஆவணங்களுடன் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள மாவட்ட அரசினா் தொழில்பயிற்சி நிலைய முதல்வரிடம் செப்.18ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

முதனிலைத் தோ்வுகளில் அக்.15இல் கருத்தியல் தோ்வு , அக்.16இல் செய்முறை தோ்வு சென்னை கிண்டி அரசினா் தொழில்பயிற்சி நிலையத்தில் நடத்தப்படும். மேலும் விவரங்களுக்கு 7603942550, 9443418102, 04633-298088 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com