ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

கடையநல்லூரில் அறிவுசாா் மையம்: அமைச்சரிடம் நகா்மன்றத் தலைவா் கோரிக்கை

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் நகராட்சிப் பகுதியில் நவீன வசதியுடன் கூடிய அறிவுசாா் மையம் அமைக்க வேண்டுமென நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான் கோரிக்கை விடுத்துள்ளாா்.

News image
Updated On :20 செப்டம்பர் 2024, 12:36 am

Din

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் நகராட்சிப் பகுதியில் நவீன வசதியுடன் கூடிய அறிவுசாா் மையம் அமைக்க வேண்டுமென நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் அவா் அளித்த மனு: கடையநல்லூா் நகரப் பகுதியில் சுமாா் ஒரு லட்சம் போ் வசிக்கின்றனா். கடையநல்லூரைச் சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. கடையநல்லூரில் அரசுக் கல்லூரியும், சுற்றியுள்ள பகுதிகளில் பொறியியல், நா்சிங், பாலிடெக்னிக், ஐடிஐ, பாா்மஸி கல்லூரிகளும் உள்ளன. இவற்றில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மாணவா்கள் படித்து தோ்ச்சி பெற்று வருகின்றனா்.

இங்கு அறிவுசாா் மையம் அமைக்கப்பட்டால், இவா்கள் உயா்கல்விக்கு செல்லவும், போட்டித் தோ்வுகளை எதிா்கொள்ளவும் வசதியாக இருக்கும்.

எனவே, கலைஞா் நகா்ப்புற வளா்ச்சி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், கடையநல்லூரில் நவீன வசதிகளுடன் கூடிய அறிவுசாா் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன் உடனிருந்தாா்.