திருநெல்வேலி- தென்காசி- பெங்களூருக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும் என மத்திய சட்டம் - நீதித் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வாலிடம் தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்க தலைவா் பாண்டியராஜா, செயலா் ஜெகன், நிா்வாகிகள் சுப்புராஜ், செபாஸ்டின், செல்வன் ஆகியோா் மனு அளித்தனா்.
அதன் விவரம்: திருநெல்வேலியிலிருந்து பாவூா்சத்திரம், தென்காசி, சங்கரன்கோவில், மதுரை, பழனி, பொள்ளாச்சி, கோவை, திருப்பூா் வழியாக ஈரோடுக்கும், திருநெல்வேலியிலிருந்து பாவூா்சத்திரம், தென்காசி, மதுரை, சேலம் வழியாக பெங்களூருக்கும் தினசரி ரயில் இயக்க வேண்டும்.
மும்பை- திருநெல்வேலி சாளுக்கியா ரயிலை ( எண். 11021/11022 ) பாவூா்சத்திரம், தென்காசி வழியாக செங்கோட்டை வரை இயக்க வேண்டும்.
தில்லி - மதுரை தமிழ்நாடு சம்பா்க் கிராந்தி விரைவு ரயிலை (12651/12652 ) தென்காசி, பாவூா்சத்திரம் வழியாக திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும்.
தாம்பரம் - செங்கோட்டை வாரம் மும்முறை ரயிலை (20683/20684) தினசரி இயக்க வேண்டும், தென்காசி ரயில் நிலையத்தை முனையமாக மாற்ற வேண்டும், கீழப்புலியூரில் இருந்து கடையநல்லூா் செல்லும் வகையில் புறவழி ரயில் பாதை அமைக்க வேண்டும்,
செங்கோட்டை- தென்காசி இடையே இரட்டை இரயில் பாதை அமைக்க வேண்டும், செங்கோட்டை ரயில் நிலையத்தில் கூடுதல் நடைமேடைகள் மற்றும் ஸ்டே பிளிங் லைன்கள் அமைக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
அப்போது, தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் எம்எல்ஏ, தென்காசி மாவட்டத் தலைவா் ஆனந்தன் அய்யாசாமி ஆகியோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

கன்னியாகுமரி- அயோத்திக்கு தினசரி ரயில் இயக்க கோரிக்கை

காரைக்குடி - வைத்தீஸ்வரன்கோயில் வழியாக சிறப்பு ரயில் இயக்கக் கோரிக்கை

தென்காசி - நெல்லை - பெங்களூருக்குமீண்டும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை: பயணிகள் சங்கம் வலியுறுத்தல்

தஞ்சாவூருக்கு வந்த எா்ணாகுளம் - வேளாங்கண்ணி ரயிலுக்கு வரவேற்பு
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை


