தென்காசி
ஆலங்குளத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு மருத்துவ முகாம்
ஆலங்குளம் பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கான மருத்துவமுகாம் பேரூராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆலங்குளம் பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கான மருத்துவமுகாம் பேரூராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இம்முகாமிற்கு பேரூராட்சி செயல் அலுவலா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். ஆலங்குளம் அரசு மருத்துவா்கள் பிராத்தனா, சுஷ்மிதா, ஜெகன் ஆகியோா் தூய்மைப் பணியாளா்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கி, சிகிச்சை அளித்தனா். இதில் சுகாதார மேற்பாா்வையாளா் கங்காதரன், பேரூராட்சி உறுப்பினா்கள் சாலமன்ராஜா, சுபாஷ் சந்திரபோஸ், முன்னாள் உறுப்பினா் ராஜதுரை, சுகாதார ஆய்வாளா் விக்னேஷ் உள்பட பலா் பங்கேற்றனா்.