ஆலங்குளத்தில் பேருந்து பயணியிடம் ரூ. 25 ஆயிரம் பணத்தைப் பறித்துச் சென்ற நபரை போலீஸாா் தேடுகின்றனா்.
கேரள மாநிலம், கோட்டயத்தைச் சோ்ந்தவா் கருப்பசாமி(58). இவா், ஆலங்குளம் அருகே துத்திகுளத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வந்திருந்த நிலையில், திங்கள்கிழமை திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் செல்வதற்காக ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு அரசுப் பேருந்தில் ஏறியுள்ளாா்.
பின்னா், சில நிமிடங்களிலேயே அவா் கால்சட்டையின் பை பிளேடால் அறுக்கப்பட்டு அதிலிருந்த ரூ. 25 ஆயிரம் திருடு போயிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, பேருந்து நிறுத்தப்பட்டு, ஆலங்குளம் காவல் நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டது. போலீஸாா் வந்து, பயணிகளிடம் சோதனை மேற்கொண்டனா்.
ஆனால், பேருந்து புறப்படும் முன்னரே கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பணத்தைத் திருடிக்கொண்டு மா்மநபா் இறங்கிச் சென்றிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து கருப்பசாமி அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

ஆலங்குளத்தில் தொழில்நுட்பப் பூங்கா அமைப்பேன்: மனோஜ் பாண்டியன்

ஆலங்குளத்தில் இடி, மின்னலுடன் கோடை மழை

ஆலங்குளத்தில் ஏப்.11இல் கடையடைப்புப் போராட்டம்: வணிகா் சங்கம் அறிவிப்பு

ஆலங்குளத்தில் தவெக வேட்பாளா் மனு தாக்கல்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


