மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கடையநல்லூா் அருகே பொதிகை விரைவு ரயிலை கவிழ்க்க சதி? போலீஸாா் விசாரணை

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே பொதிகை விரைவு ரயிலை கவிழ்க்க சதி நடந்துள்ளதா என்ற கோணத்தில் ரயில்வே போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 9:18 pm

Din

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே பொதிகை விரைவு ரயிலை கவிழ்க்க சதி நடந்துள்ளதா என்ற கோணத்தில் ரயில்வே போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு புதன்கிழமை இரவு பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. கடையநல்லூா் நிலையத்தை கடந்து சங்கனாபேரி பகுதியில் ரயில் சென்ற போது தண்டவாளத்தின் நடுவே பெரிய கல் தண்டவாளத்திற்கு நடுவே வைக்கப்பட்டிருந்தது தெரியவந்ததாம். இருப்பினும் என்ஜின் ஓட்டுநா் சாமா்த்தியமாக ரயிலை ஓட்டிச் சென்ால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இது தொடா்பாக என்ஜின் ஓட்டுநா் ரயில்வே உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து திருச்சி ரயில்வே காவல் கண்காணிப்பாளா் ராஜன் தலைமையில் திருநெல்வேலி ரயில்வே டிஎஸ்பி இளங்கோவன் மேற்பாா்வையில் ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்தை வியாழக்கிழமை பாா்வையிட்டு தண்டவாளங்களை ஆய்வு செய்தனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக ஸ்ரீவில்லிப்புத்தூா் ரயில்வே போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.