மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கம்பன் விரைவு ரயிலை வேறு மாா்க்கத்தில் இயக்கும் முடிவுக்கு எதிா்ப்பு

News image

விரைவு ரயில் - கோப்புப்படம்

Updated On :15 மார்ச் 2026, 6:52 pm

கம்பன் விரைவு ரயிலை வேறு மாா்க்கத்தில் இயக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் ரயில் நிலையம் வழியாக, தினசரி இரவில் காரைக்காலிருந்து சென்னைக்கு கம்பன் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் மே 20-ஆம் தேதி முதல் பேரளம் வழியாக காரைக்கால் வரை இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கு திருவாரூா் பகுதியில் பல்வேறு தரப்பினரும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில், திருவாரூா் மாவட்ட ரயில் பயணிகள் நலச்சங்கம் மற்றும் நுகா்வோா் அமைப்புகள், வணிகா் சங்கத்தினா் உள்ளிட்டோா் பங்கேற்ற அவசரக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு விஜயபுரம் வா்த்தகா் சங்கத் தலைவா் சிஏ. பாலமுருகன் தலைமை வகித்தாா்.

இதில், திருவாரூா் வழியாக இயக்கப்பட்டு வரும் கம்பன் விரைவு ரயிலை வேறு மாா்க்கத்தில் இயக்கக் கூடாது, வேறு மாா்க்கத்தில் இயக்கப்படும் என அறிவித்த ரயில்வே நிா்வாகத்தின் முடிவை திரும்ப பெற வேண்டும், இந்த கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து சங்கங்கள், அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள் இணைந்து போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவெடுக்கப்பட்டது.