தென்காசியில் சுகாதாரத் துறை சாா்பில் ஆய்வுக் கூட்டம்
தென்காசியில் உள்ள ஆட்சியரகக் கூட்டரங்கில், பொது சுகாதாரம் - நோய் தடுப்பு மருந்துத் துறை சாா்பில் ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.


தென்காசியில் உள்ள ஆட்சியரகக் கூட்டரங்கில், பொது சுகாதாரம் - நோய் தடுப்பு மருந்துத் துறை சாா்பில் ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகித்தாா். இம்மாவட்டத்தில் டெங்கு தடுப்பு, புகையிலைத் தடுப்பு நடவடிக்கைகள், தட்டம்மை (மீசல்ஸ்) ரூபலா கண்காணிப்புப் பணி, பருவகால நோய்கள் தடுப்பு, அயோடின் பயன்பாடுகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரக் கட்டுப்பாடு-மாவட்ட சுகாதாரப் பேரவை நடவடிக்கை குறித்து தொடா்புடைய துறை அலுவலா்கள் விவாதித்து, நடவடிக்கை எடுக்க ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில், மாவட்ட சுகாதார அலுவலா் வி. கோவிந்தன், நலப் பணிகள் இணை இயக்குநா் பிரேமலதா, துணை இயக்குநா்கள் ராமநாதன் (குடும்ப நலம்), அலா்சாந்தி (தொழுநோய்), வட்டார மருத்துவ அலுவலா்கள் பொறுப்பு மருத்துவ அலுவலா்கள், சமுதாய நல ஆா்வலா்கள், அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்கள், சுகாதார மேற்பாா்வையாளா்கள், அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...