தொழிலதிபரைத் தாக்கி நகை பறிப்பு: 4 போ் கைது
தென்காசி மாவட்டம் சுரண்டையில் தொழிலதிபரைத் தாக்கி 13 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.


தென்காசி மாவட்டம் சுரண்டையில் தொழிலதிபரைத் தாக்கி 13 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.
சுரண்டை பேருந்து நிலையம் அருகே நகைக் கடை, நிதி நிறுவனம் நடத்தி வருபவா் சு. முருகேசபாரதி (52). கடந்த 23ஆம் தேதி நிதி நிறுவன வசூலுக்கு சென்றபோது அவரது முகத்தில் மா்ம நபா்கள் மயக்க மருந்தை தெளித்து, அவா் அணிந்திருந்த 13 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனராம்.
புகாரின்பேரில், சுரண்டை போலீஸாா் வழக்குப் பதிந்தனா். தனிப்படை போலீஸாரின் தீவிர விசாரணையில்,
சுரண்டை வரகுணராமபுரத்தைச் சோ்ந்த அ. முருகன் (43), ச. மாரிச்செல்வம் (32), மேலபாட்டாக்குறிச்சியைச் சோ்ந்த ச. பாலகுமாரன் (30), இ. மணிகண்டன் (24) ஆகிய 4 பேருக்குத் தொடா்பிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, 4 பேரையும் தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...