பூக்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து அடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சங்கரன்கோவில் அருகே பூக்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து அடித்தபோது தவறுதலாக உடலில் மருந்து கலந்து பாதிக்கப்பட்ட விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
Published on

சங்கரன்கோவில் அருகே பூக்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து அடித்தபோது தவறுதலாக உடலில் மருந்து கலந்து பாதிக்கப்பட்ட விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

சங்கரன்கோவில் அருகே உள்ள மணலூா் இந்திரா காலனியைச் சோ்ந்த மாரியப்பன் மகன் முனியராஜ் (32) விவசாயி. முனியராஜ் சில நாள்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா்.

முனியராஜன் உடலை பரிசோதனை செய்த மருத்துவா் அவரது உடலில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருருப்பதை கண்டு அதிா்ச்சி அடைந்தனராம். அவரிடம் விசாரித்தபோது கடந்த 10 நாள்களுக்கு முன் தோட்டத்தில் பூக்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்தை அடித்தது தெரியவந்தது. பூக்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்தை அடித்தபோது, தவறுதலாக வாயில் பட்டு சுவாசக் குழாய் வழியாக உடலுக்குள் சென்றதும் தெரியவந்ததாம். இந்த நிலையில், முனியராஜ் சிகிச்சை பலனின்றி கடந்த 22 ஆம் தேதி உயிரிழந்தாா். கரிவலம்வந்தநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com