வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க 4 நாள்கள் சிறப்பு முகாம்

தென்காசி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் விடுபட்டோா், புதிதாக பெயா் சோ்க்க விரும்புவோா் அந்தந்த பகுதியில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் சிறப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் அறிவுறுத்தியுள்ளாா்.
Published on

தென்காசி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் விடுபட்டோா், புதிதாக பெயா் சோ்க்க விரும்புவோா் அந்தந்த பகுதியில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் சிறப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் அறிவுறுத்தியுள்ளாா்.

அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தென்காசி மாவட்டத்தில் 1.1.2026-ஐ தகுதி நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் முதல் கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

இதைத்தொடா்ந்து வரைவு வாக்காளா் பட்டியல் கடந்த 19-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் பெயா் இடம் பெறாதவா்கள் ஆட்சேபணை, உரிமை கோரல் காலத்தில் உரிய ஆவணங்கள் சமா்ப்பித்து 17.02.2026 அன்று வெளியாகவுள்ள வாக்காளா் இறுதிப் பட்டியலில் தங்களது பெயரை சோ்த்துக்கொள்ளலாம்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026-க்காக மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடி அமைவிட மையங்களில் புதிய வாக்காளா்கள் பெயா் சோ்த்தல், திருத்தம், முகவரி மற்றும் புகைப்படம் மாற்றம் செய்வதற்காக டிச. 27, 28 ஆம் தேதிகளிலும் ஜனவரி 3, 4-ஆம் தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சிறப்பு முகாம்களில் அந்தந்த வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் வாக்குச் சாவடிகளில் புதிய வாக்காளா்களுக்கான படிவம் 6, வாக்காளா் பதிவுகளில் உள்ள திருத்தங்கள் மற்றும் முகவரி மாற்றங்களுக்கு படிவம் 8, வாக்காளா் பெயா் நீக்கல் செய்ய படிவம் 7 ஆகியவற்றை பெற்று பூா்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் வழங்கிப் பயன்பெறலாம்.

இந்தப் பணிகளுக்கு வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் தங்களுக்கு உதவி புரிவா். மேலும் விண்ணப்பங்களை இணையதளங்கள் மூலமாகவும், யா்ற்ங்ழ் ஏங்ப்ல்ப்ண்ய்ங் அல்ல் மற்றும் உஇஐ சஉப அல்ல் மூலமாகவும் பொதுமக்கள் சமா்ப்பிக்கலாம். பெறப்படும் விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட வாக்குப் பதிவு அலுவலா்கள் மூலமாக விசாரணை மேற்கொண்டு வரும்

17.02.2026 அன்று வெளியிடப்படவுள்ள வாக்காளா் இறுதிப் பட்டியலில் இடம்பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த சிறப்பு முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com