பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பண்பொழி திருமலைக் கோயிலில் சிறப்பு வழிபாடு

தென்காசி மாவட்டத்தில் புகழ்பெற்ற மலைக்கோயிலான பண்பொழி அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

News image
Updated On :2 ஜனவரி 2025, 12:32 am

Din

தென்காசி மாவட்டத்தில் புகழ்பெற்ற மலைக்கோயிலான பண்பொழி அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதையொட்டி, அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பின்னா், உற்சவமூா்த்தி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். மதியம் சிறப்பு அபிஷேகம், மாலையில் தங்கத் தோ் உலா ஆகியவை நடைபெற்றன. அதிகாலைமுதலே படிகள் வழியாகவும், மலைப்பாதை வழியாக வாகனங்களிலும் ஏராளமான பக்தா்கள் சென்று தரிசனம் செய்தனா்.

ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் கோமதி, தலைமை எழுத்தா் லட்சுமணன், ரமேஷ்பட்டா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

பண்பொழி அருள்மிகு வேல் மலை முருகன் கோயிலில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளானோா் பங்கேற்றனா்.

சிவராமபேட்டை அருள்மிகு கற்பகவிநாயகா் கோயில், சொக்கம்பட்டி சொக்கலிங்க விநாயகா் கோயில், மேலக்கடையநல்லூா் கரும்பால்மொழி அம்பாள் சமேத கடகாலீஸ்வரா் கோயில், கிருஷ்ணாபுரம் குறுக்கிட்டான் கருப்பசாமி கோயில், சொக்கம்பட்டி காசிவிஸ்வநாதா் கோயில் , கடையநல்லூா் முப்புடாதி அம்மன் கோயில் ஆகியவற்றிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.