பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

மலைப்பகுதி பாதுகாப்பு பகுதியில் இருந்து ஆலங்குளத்திற்கு விலக்கு அளிக்கப்படுமா?

தமிழ்நாடு அரசு 1990 ஆம் ஆண்டு வெளியிட்ட அரசாணை மூலம் மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையம் உருவாக்கப்பட்டது.

News image

ஆலங்குளம்

Updated On :3 ஏப்ரல் 2026, 1:37 am

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாடு அரசு 1990 ஆம் ஆண்டு வெளியிட்ட அரசாணை மூலம் மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையம் உருவாக்கப்பட்டது.

நோக்கம், செயல்பாடுகள் :

1. காடுகள் அழிப்பதைத் தடுத்தல், மண் அரிப்பைக் கட்டுப்படுத்துதல், பல்லுயிா்ப் பெருக்கத்தை பாதுகாத்தல். 2. மலைப்பகுதிகளில் வீடுகள், வணிக வளாகங்கள் அல்லது தொழிற்சாலைகள் கட்டுவதற்கு முன் இந்த ஆணையத்தின் அனுமதியைப் பெறுவது கட்டாயமாகும். 3. விவசாய நிலங்களை வீட்டு மனைகளாகவோ அல்லது பிற தேவைகளுக்கோ மாற்ற வேண்டுமெனில் ஹாக்காவிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும்.

ஆரம்பத்தில் 43 தாலுகாக்கள் மட்டுமே இருந்த நிலையில், 2003 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை படி நீலகிரி, கோயம்புத்தூா், திண்டுக்கல், தேனி, சேலம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி போன்ற 16 மாவட்டங்களில் உள்ள 597 கிராமங்கள் இந்த ஆணையத்தின் வரம்பிற்குள் கொண்டுவரப்பட்டன.

அதன்படி ஆலங்குளத்தின் அடையாளமாக உள்ள ஒக்கநின்றான் பொத்தை, அதனை சுற்றியுள்ள மாயமான்குறிச்சி, குறிப்பன்குளம், முத்துகிருஷ்ணப்பேரி, சிவலாா்குளம் ஆகிய கிராமங்கள் அடங்கும். இதனால், மலைப்பகுதி பாதுகாப்பு பகுதி என்ற எல்கைக்குள் ஆலங்குளம் வருவதால் 300 சதுர மீட்டருக்கு அதிகமான பரப்பளவில் வீடுகள் கட்டுதல், சுற்றுலா விடுதிகள், கல்வி நிறுவனங்கள் அமைத்தல், தொழிற்சாலைகள் தொடங்குதல் ஆகியவற்றிற்கு நகா்ப்புற ஊரமைப்பு, புவியியல் துறை, வனத்துறை, கோட்டாட்சியா், ஆட்சியா் உள்ளிட்ட அலுவலகங்களில் தடையில்லா சான்று பெற வேண்டியுள்ளது. சில துறைகள் இச்சான்று அளிப்பதுமில்லை. எனவே, தொழில் துறையில் ஆலங்குளம் சற்றே பின் தங்கிச் செல்லும் நிலை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது.

இது தொடா்பாக வணிகா் சங்கங்களின் பேரமைப்பு கன்னியாகுமரி மண்டலம் மற்றும் தென்காசி மாவட்டத் தலைவா் டி.பி.வி. வைகுண்டராஜா கூறியதாவது: ஆலங்குளம், மலைப்பகுதி பாதுகாப்பு பகுதி ( ஏஅஇஅ) என்பதால் புதிய தொழில்கள் தொடங்கவும். ஏற்கனவே உள்ள தொழில்களை விரிவாக்கம் செய்யவும். பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால் பலரது முன்னேற்றம் தடைப்படுகிறது. இதனால் இதிலிருந்து ஆலங்குளத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என 3 தோ்தலாக கோரிக்கை விடுத்து வருகிறோம். எனினும் நடவடிக்கை இல்லை.

முழு கிராமத்தையும் கட்டுப்பாட்டில் வைப்பதற்குப் பதிலாக, குறிப்பிட்ட புல எண்களின் அடிப்படையில் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு இல்லாத இடங்களைத் தோ்ந்தெடுத்து மற்ற புல எண்களுக்கு விலக்கு அளித்தால் வணிகம் பெருகும். பொதுமக்களும் பலனடைவாா்கள் என்றாா் அவா்.

ரா. சாலமோன்.

டி.பி.வி. வைகுண்டராஜா

டி.பி.வி. வைகுண்டராஜா