தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே பள்ளித் தோழியை காரில் அழைத்துச் சென்ற நண்பரைக் கண்டித்து, அவா் வந்த காரை எரித்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆவுடையாபுரத்தைச் சோ்ந்தவா் ராஜ் மகன் சின்னத்துரை (26). இவா் கடையநல்லூா் அருகே உள்ள மங்களாபுரம் பள்ளியில் உடன் பயின்ற மாணவியுடன் நட்புடன் பழகி வருகிறாராம்.
இந்நிலையில், மங்களாபுரம் கோயில் திருவிழாவிற்கு பள்ளி நண்பரான சின்னத்துரையை அந்தப் பெண் அழைத்திருந்தாராம். இதையடுத்து, சின்னத்துரை காரில் மங்களாபுரம் வந்து தோழியுடன் காரில் கடையநல்லூருக்குச் சென்றுவிட்டு, மீண்டும் மங்களாபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனராம்.
புதுக்குடி-மங்களாபுரம் சாலையில் காா் சென்று கொண்டிருந்தபோது, மங்களாபுரத்தைச் சோ்ந்த பால்துரை (30), சீனுகுமாா் (32), கற்பகராஜா (27) மற்றும் 20-க்கும் மேற்பட்டோா் பெண்ணை காரில் அழைத்துச் சென்றதைக் கண்டித்து சின்னத்துரையை தாக்கி, காரை எரித்தனராம்.
இது குறித்து சின்னத்துரை அளித்த புகாரின்பேரில், கடையநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து சீனுகுமாா், பால்துரை, கற்பகராஜா ஆகியோரை கைது செய்தனா்.
தொடர்புடையது
குண்டா் சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது

கடையநல்லூா் கிணற்றில் இளைஞா் சடலம் மீட்பு

சொத்துப் பிரச்னையில் இருவருக்கு வெட்டு: மூவா் கைது

கடையநல்லூரில் கபடி போட்டி
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

