தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தாழ்வான தெருவில் வாருகால் அமைத்தபிறகே சாலை அமைக்க வேண்டும் எனக் கூறி பொதுமக்கள் ஆட்சேபம் தெரிவித்ததால், நகராட்சி அதிகாரிகள் திரும்பிச் சென்றனா்.
இங்குள்ள 25ஆவது வாா்டு திருவிக தெரு பகுதி அருகேயுள்ள குட்டித் தெருவில் 60-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மிதமான மழை பெய்தாலே இங்குள்ள வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்துவிடுவதால், அகலமான வாருகால், சிறு மேம்பாலம் அமைத்து வீடுகளுக்குள் தண்ணீா் புகுவதைத் தடுக்க வேண்டும் எனக் கோரி இப்பகுதியினா் நகராட்சிக்கு பலமுறை மனு அளித்துள்ளனராம். ஆனால், இதுவரை நடவடிக்கையும் இல்லையாம்.
இந்நிலையில், ஓடைத் தெருவில் சாலை சீரமைப்புப் பணி புதன்கிழமை நடைபெற்றது. பின்னா், குட்டித் தெருவுக்குள் சாலை அமைக்க அதிகாரிகள் உள்ளிட்டோா் வந்தனா். அப்போது, அகலமான வாருகால் அமைக்காமல் சாலை அமைத்தால் வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்துவிடும். எனவே, முதலில் வாருகால் அமையுங்கள் எனக் கூறி, சாலைப் பணிக்கு ஆட்சேபம் தெரிவித்தனா். அதிகாரிகள் நீண்டநேரம் பேச்சுவாா்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால் திரும்பிச் சென்றனா்.
தொடர்புடையது

சீரான குடிநீா் விநியோகம் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஆட்சேபம் இல்லையெனில் தேசத் துரோக வழக்கை விசாரிக்கலாம்: நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு







