/

நெடுவயல் சிவசைலநாத பள்ளியில் பாராட்டு விழா

கடையநல்லூா் அருகேயுள்ள நெடுவயல் சிவசைலநாத நடுநிலைப்பள்ளியில் தேசிய திறனாய்வு தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

News image

தேசிய திறனாய்வு தோ்வில் வெற்றி பெற்றவா்களுடன் மாவட்ட சமூக நல அலுவலா் மதிவதனா.

Updated On :28 ஏப்ரல் 2026, 8:44 pm

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகேயுள்ள நெடுவயல் சிவசைலநாத நடுநிலைப்பள்ளியில் தேசிய திறனாய்வு தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

தாளாளா் கணேஷ்ராம் தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் சுதா நந்தினி வரவேற்றாா். தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு தென்காசி மாவட்ட சமூக நல அலுவலா் மதிவதனா பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா்.

இந்நிகழ்ச்சியில், பள்ளிச் செயலா் தம்புசாமி, பள்ளிக் குமு உறுப்பினா் மணிகண்டன், முன்னாள் தலைமையாசிரியா்கள் ராமசாமி, காா்த்திகேயன், ஹரிணி வித்யாலயா பள்ளித் தாளாளா் சுப்பிரமணியன், முன்னாள் மாணவா் குட்டிதுரை, ஆசிரியா்கள், பெற்றோா் கலந்துகொண்டனா். ஆசிரியா் பிரபாகரன் நன்றி கூறினாா்.