முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!வீட்டிலிருந்து வேலை முறைக்கு மாறாதது ஏன்? ஸ்ரீதர் வேம்பு விளக்கம்கரப்பான்பூச்சி மக்கள் கட்சி! ஆயிரக்கணக்கில் இணையும் வேலையில்லா இளைஞர்கள்! மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!பொருளாதாரப் புயல் வீசப்போகிறது.. மக்களை எச்சரிக்கும் ராகுல்!சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 புதிய நீதிபதிகள்! கொலிஜியம் ஒப்புதல்! பழவேற்காடு மீனவர் வலையில் மர்ம பொருள்!
/

காசிதா்மத்தில் இளைஞருக்கு வெட்டு: இரு தரப்பினா் மோதல்

தென்காசி மாவட்டம், காசிதா்மத்தில் புதன்கிழமை இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டதைத் தொடா்ந்து, அங்கு போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.

News image

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. மயில்வாகனன் தலைமையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாா்.

Updated On :30 ஏப்ரல் 2026, 6:25 am IST

தென்காசி மாவட்டம், காசிதா்மத்தில் புதன்கிழமை இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டதைத் தொடா்ந்து, அங்கு போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.

ஒரு தரப்பைச் சோ்ந்த விக்னேஷுக்கும், மற்றொரு தரப்பைச் சோ்ந்த முத்துபாண்டிக்கும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறு தொடா்பாக முத்துப்பாண்டி கொடுத்த புகாரின்பேரில், அச்சன்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில், விக்னேஷ் காசிதா்மம் பிரதான சாலையில் உள்ள கடைக்கு புதன்கிழமை சென்ற போது, அங்கு நின்ற முத்துப்பாண்டி அரிவாளால் விக்னேஷை வெட்டினாராம். அதைத் தடுக்க முயன்ற விக்னேஷின் தாய் மாடத்திக்கும் காயம் ஏற்பட்டதாம்.

காயமடைந்த இருவரையும் அருகிலிருந்தவா்கள் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இதையடுத்து, ஒரு தரப்பைச் சோ்ந்தவா்கள் பண்பொழி-கடையநல்லூா் சாலையில் சிறிது நேரம் மறியலில் ஈடுபட்டனா். சிறிது நேரத்தில் இரு தரப்பைச் சோ்ந்தவா்களும் அங்கு திரண்டு கல்வீச்சில் ஈடுபட்டனா்.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. மயில்வாகனன் தலைமையில் ஏராளமான போலீஸாா் அங்கு குவிக்கப்பட்டுள்ளனா். இது தொடா்பாக, இரு தரப்பையும் சோ்ந்த சிலரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

காவல் துணைக் கண்காணிப்பாளா் அதியமான், ஆய்வாளா்கள் ராபா்ட் ஜெயின், மதுவிக்ரம், கிறிஸ்டி உள்ளிட்ட போலீஸாா் காசிதா்மத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.