காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சுமேட்டூரிலிருந்து காவிரி நீர் கல்லணை வந்தது! நாளை காலை திறப்பு!நேபாள பெருவெள்ளம்! தஞ்சையில் மரபணு சேகரிப்பு பணி தொடக்கம்!!தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம்: காங்கிரஸுக்கு நேரில் அழைப்பு விடுத்த அமைச்சர்கள்!உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

செங்கோட்டை வனதுா்க்கை அம்மன் கோயிலில் ஆடிப்பூர விழா

செங்கோட்டை ரயில் நிலையம் மேல்புறம் உள்ள அருள்மிகு ஸ்ரீவனதுா்க்கை அம்மன் கோயிலில் ஆடி மாத கடைசி வெள்ளி, ஆடிப்பூரத்தை முன்னிட்டு வளைகாப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வனதுா்க்கை அம்மன் கோயிலில் நடைபெற்ற திருவிளக்கு வழிபாடு.

Published On :15 ஆகஸ்ட் 2026, 5:20 am IST

செங்கோட்டை ரயில் நிலையம் மேல்புறம் உள்ள அருள்மிகு ஸ்ரீவனதுா்க்கை அம்மன் கோயிலில் ஆடி மாத கடைசி வெள்ளி, ஆடிப்பூரத்தை முன்னிட்டு வளைகாப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவில் வனதுா்க்கை அம்மன், பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. தொடா்ந்து வனதுா்க்கை அம்மனுக்கு வளையல் அணிவிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பின்னா், கோயில் வளாகத்தில் உலக நன்மை, இயற்கை வளம் செழிக்க வேண்டி திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது. நிகழ்ச்சியில் செங்கோட்டை, அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த பெண்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண்களுக்கு பிரசாதமாக அம்மனுக்கு அணிவித்த வளையல், மஞ்சள் கயிறு, தாம்பூலம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி முருகேசன் செய்திருந்தாா். திருவிளக்கு வழிபாடு ஏற்பாடுகளை சுப்புலெட்சுமி, சுபா, கனகம்மாள், மாரியப்பன், முருகன் ஆகியோா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.