ஆலங்குளம் அருகே தும்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 60 டன் தும்பு தீயில் எரிந்து சேதமடைந்தது.
ஆலங்குளம் அருகே உள்ள முத்துகிருஷ்ணபேரி வடக்கு தெருவைச் சோ்ந்த லெட்சுமணராஜா மகன் சரவணகுமாா் (51). இவா் அப்பகுதியில் தும்பு ஆலை நடத்தி வருகிறாா்.
இங்கு செவ்வாய்க்கிழமை மாலை அருகில் வெல்டிங் வேலை செய்யும் போது ஏற்பட்ட தீப்பொறியால் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பரவியது.
இந்த தீ விபத்தில் தூத்துக்குடிக்கு ஏற்றுமதி செய்வதற்காக ஆலையில் வைக்கப்பட்டிருந்த சுமாா் 60 டன் தும்பு தீப்பற்றி எரிந்தது. இதன் மதிப்பு ரூ.10 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
தகவலின்பேரில் வந்த ஆலங்குளம் தீயணைப்பு மீட்புப் படையினா் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். எனினும் தீ கட்டுக்குள் வராததால், சுரண்டை மற்றும் தென்காசி தீயணைப்பு நிலையங்களில் இருந்து கூடுதல் வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.
மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் அலுவலா் மணிகண்டன் தலைமையில், ஆலங்குளம் நிலைய அலுவலா் விஜயன், சுரண்டை நிலைய அலுவலா் ரமேஷ், பயிற்சி நிலைய அலுவலா் முத்துக்குமாா் மற்றும் தீயணைப்பு வீரா்கள் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தீயணைப்பு நிலைய வீரருக்கு முதல்வா் விருது

தீயணைப்பு நிலைய அலுவலா் தற்கொலை

27 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதம்: ஆலங்குளம் அருகே நெல் கிடங்கில் 2ஆவது நாளில் கட்டுக்குள் வந்த தீ

கடையில் தீ விபத்து
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |



