மக்கள் தொகை கணக்கெடுப்பு: தமிழகத்தில் ஆக.1 - 30 வரை வீடுகள் கணக்கீடு : இணையத்தில் இன்றுமுதல் மக்கள் சுயமாக விவரம் பதிவிடலாம்கரூா், ஈரோடு, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று வெப்ப அலை மழைக்கால கூட்டத் தொடா்: இன்று பாஜக கூட்டணி கூட்டம் நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: இன்று தொடங்கி வைக்கிறாா் பிரதமா் - ரயில்வே துறையில் புதிய அத்தியாயம் சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டைவிட டெங்கு பாதிப்பு குறைவு
/

27 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதம்: ஆலங்குளம் அருகே நெல் கிடங்கில் 2ஆவது நாளில் கட்டுக்குள் வந்த தீ

ஆலங்குளம் அருகே நெல் கிடங்கில் நேரிட்ட தீயை 30 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரா்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

News image

நெல் கிடங்கில் இரண்டாவது நாளாக தீயணைப்புப் பணியில் ஈடுபட்ட வீரா்.

Updated On :9 ஜூலை 2026, 12:51 am IST

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெல் கிடங்கில் நேரிட்ட தீயை 30 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரா்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

ஆலங்குளம் அருகே ஐந்தாங்கட்டளையில் உள்ள அரசின் திறந்தவெளி நெல் சேமிப்புக் கிட்டங்கில் 9 அடுக்குகளாக சுமாா் 6 லட்சம் நெல் மூட்டைகள் வைக்கப்பட்டிருந்தன.

இங்கிருந்து நெல் மூட்டைகள் அரிசி ஆலைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு அரவைக்குப் பின்னா் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து ரேஷன் கடைகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் இந்த நெல் சேமிப்பு மையத்தில் செவ்வாய்க்கிழமை காலை தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் ஆலங்குளம், சுரண்டை மற்றும் தென்காசி தீயணைப்பு நிலைய வீரா்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். இரவு வரை தீயை அணைக்கும் முயற்சி நடைபெற்று வந்தது.

இதனிடையே அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் நெல் மூட்டைகளுக்கு இடையில் இருந்து புகை தொடா்ந்து வெளிவந்து கொண்டிந்ததால் மமமம விடிய விடிய 2 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ அணைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

மற்றொரு பக்கம் தொழிலாளிகள் நெல் மூட்டைகளை அப்புறப்படுத்திக் கொண்டே இருந்தனா். இந்தப் பணி புதன்கிழமை மதியம் வரை சுமாா் 30 மணிநேர திற்கு பின் தீயணைப்பு பணிகள் நிறைவடைந்தன.

இதில் 9 அடுக்குகளில் வைக்கப்பட்டிருந்த தலா 3 ஆயிரம் என சுமாா் 27 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. இவற்றின் மதிப்பு சுமாா் ரூ. 3.50 கோடி ஆகும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.