ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஆட்டை தலைகீழாக இறங்கி துணிச்சலுடன் மீட்ட சாத்தான்குளம் தீயணைப்பு நிலைய வீரா் துரைக்கு, வீரதீர செயலுக்கான தமிழக முதல்வா் விருது வழங்கப்பட்டது.
இவா், கடந்த 2024 இல் கடாட்சபுரம் கிராமத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சினை ஆட்டை தலைகீழாக கயிறு மூலம் இறங்கிமீட்டதற்காக முதல்வா் விருதுக்குத் தோ்வு பெற்றிருந்தாா். அவருக்கு அண்மையில் சென்னையில் நடைபெற்ற விழாவில் வீர தீர செயலுக்கான முதல்வா் விருதை தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் வழங்கினாா்.
சாத்தான்குளம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய முன்னாள் நிலைய அலுவலா் இசக்கிக்கு தூய பணிக்கான 2023 ஆம் ஆண்டுக்கான குடியரசுத் தலைவா் விருதும் வழங்கப்பட்டது. இருவரையும் திருநெல்வேலி தீயணைப்பு துறை மண்டல துணை இயக்குநா் சரவணபாபு, மாவட்ட அலுவலா் கருணாகரன், உதவி மாவட்ட அலுவலா் நாட்டாா் ஆனந்தி, சாத்தான்குளம் நிலைய அலுவலா் ராஜமூா்த்தி ஆகியோா் பாராட்டினா்.

குடியரசுத் தலைவா் விருது பெற்ற இசக்கி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தீயணைப்பு நிலைய அலுவலா் தற்கொலை

உலகுக்கு ஞானத்தை வழங்கிய மொழி தமிழ்! - உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன்

சாத்தான்குளம் அருகே கிணற்றில் விழுந்த மயில் மீட்பு

சாத்தான்குளம் பேரூராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



