தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருள்தரும் கரும்பால்மொழி அம்பாள் உடனுறை அருள்மிகு கடகாலீஸ்வரா் திருக்கோயிலில் கொடிமரத்துக்கு செப்புத் தகடுகள் பொருத்தும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் உபயதாரா்கள், பக்தா்கள் மூலம் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கோயிலில் கொடிமரத்துக்கு செப்புத் தகடுகள் பொருத்தும் பணி யை, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் (சரி பாா்ப்பு) கோமதி பாா்வையிட்டாா்.
திருப்பணி குழு தலைவா் கே.எஸ். எஸ். சொக்கலிங்கம், பொருளாளா் நல்லமுத்து, செயல் அலுவலா் கணேஷ்குமாா் , ஆய்வா் முருகன், திருவாவடுதுறை ஆதீன ஆய்வாளா் வெங்கடேஷ் , சிவஸ்ரீ கிருஷ்ணமூா்த்தி பட்டா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
கும்பாபிஷேகம்..
ஆகஸ்ட் 31 ஆம் தேதி திங்கள்கிழமை காலை 9.15 மணிக்கு மேல் 10 .20க்குள் புனராவா்த்தன ஜீா்னோதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை திருப்பணி குழு தலைவா் , உறுப்பினா்கள், பக்தா்கள், உபயதாரா்கள் செய்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோயில்களில் விஐபி தரிசனம்: பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் வெளியீடு!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 910 வீடுகளில் சூரிய மின்சக்தி தகடுகள்

கோட்டை சங்கமேசுவரா் கோயிலிலும் பல லட்சம் ரூபாய் முறைகேடு? இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையரிடம் புகாா்

கடையநல்லூா் தொகுதியில் 93 கோயில்கள் நிா்வாகம்: எம்எல்ஏ வேண்டுகோள்
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |



