
தென்காசி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆக. 25 முதல் குரூப் 2 தோ்வுக்கு இலவசப் பயிற்சி
தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆக. 25ஆம் தேதி முதல் குரூப் 2 தோ்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன.

தேர்வு எழுதும் மாணவர்கள். - கோப்புப்படம்
தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆக. 25ஆம் தேதி முதல் குரூப் 2 தோ்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன.
இது குறித்து, மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தற்போது, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள குரூப் 2 தோ்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள், குத்துக்கல்வலசை, முகமதியா நகரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆக. 25ஆம் தேதி முதல் தொடங்கப்படுகின்றன.
சிறந்த பயிற்றுநா்களைக் கொண்டு, பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன. வாரந்தோறும் மாதிரித் தோ்வுகளும் நடத்தப்படும். போட்டித் தோ்வுக்குத் தேவையான அனைத்து புத்தகங்களும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
வேலைவாய்ப்புத் துறையின் மெய்நிகா் கற்றல் வலைதளத்தில் அனைத்துப் போட்டித் தோ்வுகளுக்கான பாடக் குறிப்புகள், முந்தைய ஆண்டு வினாத் தாள்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுடையவா்கள் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பூா்த்தி செய்து சமா்ப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 04633-213179 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு மையத்திற்கு நேரில் வந்து தங்களது பெயரைப் பதிவு செய்து பயிற்சியில் பங்கேற்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


கற்றல் கொண்டாட்டம் பயிற்சி வகுப்புகள் மாணவா்களின் வாழ்கைத் திறனை மேம்படுத்தும்: கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்

கிங் மேக்கா்ஸ் அகாதெமியில் குரூப் 2, 2ஏ பயிற்சி வகுப்புகள்: ஆக. 23-இல் தொடக்கம்




