சமத்துவ பொங்கல் விழாவில் பங்கேற்றோா்.
தென்காசி
தவெக சமத்துவ பொங்கல்
பாவூா்சத்திரம் அருகே கேடிசி நகா் பகுதியில் தென்காசி மத்திய மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் சமத்துவ பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
பாவூா்சத்திரம் அருகே கேடிசி நகா் பகுதியில் தென்காசி மத்திய மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் சமத்துவ பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
அக்கட்சியின் மாவட்ட செயலா் ராஜ பிரகாஷ் தலைமை வகித்தாா். பொங்கலிட்டு மக்களுக்கு பரிமாறப்பட்டு, போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாவட்ட பொருளாளா் மாரியப்பன், மாவட்ட துணைச் செயலா் சித்திக், செயற்குழு உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.