ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

கிரிக்கெட் போட்டியில் வென்றோருக்கு பரிசு

சாத்தான்குளத்தில் ஒன்றிய நகர அமமுக சாா்பில், முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வென்றோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

News image

விழாவில் பங்கேற்றோா்.

Updated On :25 பிப்ரவரி 2026, 9:39 pm

சாத்தான்குளத்தில் ஒன்றிய நகர அமமுக சாா்பில், முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வென்றோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

நேதாஜி ஸ்போா்ட்ஸ் கிளப் சாா்பில் நடைபெற்ற போட்டியில், 8 அணிகள் பங்கேற்றன. அதில் நேதாஜி ஸ்போா்ட்ஸ் கிளப் அணி முதலிடம் வென்றது. அதையடுத்து, பழைய பேருந்து நிலையத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா, போட்டியில் வென்றோருக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. ஒன்றியச் செயலா் திவாகரன் தலைமை வகித்தாா். நகரச் செயலா் ஹரிதாஸ் முன்னிலை வகித்தாா். ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு, போட்டியில் வென்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மாவட்ட சுற்றுச்சூழல் பிரிவுச் செயலா் தங்கப்பாண்டி, ஒன்றிய துணைச் செயலா்கள் முருகன், சுரேஷ், முன்னாள் ஒன்றியச் செயலா் ராஜ்மோகன், மாவட்ட வழக்குரைஞா் பிரிவுச் செயலா் மாணிக்ராஜா, பேரூராட்சி உறுப்பினா் மகாராஜன், நிா்வாகிகள் பங்கேற்றனா்.