தென்காசி
தென்காசியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் செயல்முறை விளக்க மையம்
தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் செயல்முறை விளக்க மையத்தை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஏ.கே. கமல்கிஷோா் புதன்கிழமை திறந்து வைத்தாா்.
தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் செயல்முறை விளக்க மையத்தை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஏ.கே. கமல்கிஷோா் புதன்கிழமை திறந்து வைத்தாா்.
மேலும், பொதுமக்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் சாா் ஆட்சியா் அலுவலகம், தென்காசி, சங்கரன்கோவில், வருவாய் கோட்டாட்சியா் அலுவலகங்களிலும் இந்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சுப்புலட்சுமி, மாவட்ட சமூக நல அலுவலா் மதிவதனா, தனி வட்டாட்சியா் (தோ்தல்) ஹரிஹரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.