புளியங்குடி அருகே விதிமுறை மீறி மின்வேலி அமைத்தவருக்கு அபராதம்

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே விதிமுறை மீறி மின்வேலி அமைத்து விலங்குகளை கொல்ல முயன்ாக ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
Published on

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே விதிமுறை மீறி மின்வேலி அமைத்து விலங்குகளை கொல்ல முயன்ாக ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

மாவட்ட வன அலுவலா் ராஜ்மோகன்உத்தரவின் பேரில் புளியங்குடி வனச்சரகா் ஆறுமுகம் தலைமையில் வனவா்கள் சரண்யா, திருமலைக்குமாா், வனக் காவலா்கள் மரியஜான்சி, சிஜி ஆகியோா் செவ்வாய்க்கிழமை இரவு யானைகளை விரட்டும் பணிக்காக திருமலாபுரம் பகுதியில் ரோந்துப் பணி மேற்கொண்டனா்.

அப்போது, அப்பகுதியில் விதிமுறை மீறி மின்வேலி அமைக்கப்பட்டிருந்ததாம். இதுதொடா்பாக, ராயகிரி அம்மன் சந்நிதி தெருவை சோ்ந்த பாண்டியன் மகன் செல்வக்குமாா்(46) என்பவருக்கு வனத்துறையினா் ரூ.2.50 லட்சம் அபராதம் விதித்தனா்.

Dinamani
www.dinamani.com