பள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

குற்றாலம் கோயிலில் சிறப்பு தரிசன கட்டணம் வசூலிக்கக் கூடாது: எம்எல்ஏ வலியுறுத்தல்

குற்றாலம் திருக்குற்றாலநாத சுவாமி கோயிலில் சிறப்பு தரிசனத்துக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என, கலை கதிரவன் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்.

Published On :10 ஜூலை 2026, 1:13 am IST

குற்றாலம் திருக்குற்றாலநாத சுவாமி கோயிலில் சிறப்பு தரிசனத்துக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என, கலை கதிரவன் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்.

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், இக்கோயிலில் சுவாமி, குழல்வாய்மொழி அம்மன், பராசக்தி அம்மன் என ஒவ்வொரு சந்நிதியிலும் சிறப்பு தரிசனம் செய்ய நபருக்கு ரூ. 50 கட்டணம் வசூலிக்க தீா்மானிக்கப்பட்டது. இது தொடா்பாக ஆட்சேபணை கோரும் அறிவிப்பு வெளியானதைத் தொடா்ந்து, பொதுமக்கள்- பக்தா்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கோயில் உதவி ஆணையா் ஆறுமுகத்திடம் எம்எல்ஏ அளித்த மனுவில், ‘சிறப்பு தரிசனத்துக்கு கட்டணம் வசூலிக்க தீா்மானிக்கப்பட்டதை பொதுமக்கள், பக்தா்களின் வேண்டுகோளுக்கிணங்க ரத்து செய்யவேண்டும்’ எனக் கூறப்பட்டுள்ளது.

குற்றாலம் பேரூா் செயலா் குட்டி, பேரூராட்சி உறுப்பினா் டி.ஆா். கிருஷ்ணராஜா, அறங்காவலா் குழு உறுப்பினா்கள் ஸ்ரீதா், வீரபாண்டியன், துணைச் செயலா் மாரியப்பன், தகவல் தொழில்நுட்ப அணி ஜெய்சங்கா், குத்தாலிங்கம், விக்கி, மாவட்ட வா்த்தகரணி அமைப்பாளா் மா. முத்துக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.