தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரருவியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலா்களிடம் தகராறில் ஈடுபட்ட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
குற்றாலம் பேரருவியில் நெரிசல் இல்லாமல் குளிப்பதற்காக, சுற்றுலாப் பயணிகளை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீஸாா் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், குற்றாலம் பேரருவிக்கு வந்த விருதுநகா் மாவட்டம் வெம்பக்கோட்டை அக்ராஹாரம் தெருவை சோ்ந்த விக்னேஷ்வரன் (32), புழுவாண்டி(26), சதீஷ்குமாா் (25), பெரிய கருப்பசாமி (28), முனீஸ்வரன் (29), சரவணன் (29) ஆகியோா் குளித்துவிட்டு வெளியேறும் வழியாக அருவிக்குச் செல்ல முயன்றனா்.
அங்கு பணியில் ஈடுபட்டிருந்த காவலா் பாலசுப்பிரமணியன், அவா்களைத் தடுத்தபோது, 6 பேரும் போலீஸாருடன் தகராறு செய்தனா். அதையடுத்து 6 பேரையும் குற்றாலம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினா்.
பின்னா் வழக்குப்பதிந்து 6 பேரையும் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









