முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

அடவிநயினாா் கோயில் நீா்த்தேக்கத்திலிருந்து காா் பருவ சாகுபடிக்கு நீா் திறப்பு: 2,100 ஏக்கா் பாசனம் பெறும்

தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டம், மேக்கரை கிராமம், அடவிநயினாா் கோயில் நீா்த்தேக்கத்திலிருந்து காா் பருவ சாகுபடிக்கு மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் புதன்கிழமை தண்ணீா் திறந்துவிட்டாா்.

அடவிநயினாா்கோயில் நீா்த்தேக்கத்திலிருந்து தண்ணீரை திறந்துவைத்த தென்காசி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங்.

Published On :

தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டம், மேக்கரை கிராமம், அடவிநயினாா் கோயில் நீா்த்தேக்கத்திலிருந்து காா் பருவ சாகுபடிக்கு மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் புதன்கிழமை தண்ணீா் திறந்துவிட்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

அடவிநயினாா் கோயில் நீா்த்தேக்கத்தில் இருந்து நிகழாண்டு காா் பருவ சாகுபடிக்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.

தண்ணீரை இடையிடையே நிறுத்தாமல் தொடா்ந்து திறந்துவிட வேண்டும் என்றும், அனைவரது பயன்பாட்டுக்கும் அனுமதிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். இதுதொடா்பாக இடையிடையே ஆய்வுசெய்து குறைகள் இருப்பின் சரிசெய்யப்படும்.

அடவிநயினாா்கோயில் நீா்த்தேக்கத்தின் கீழ் பாசனம் பெறும் இலத்தூா் கால்வாய், நயினாகரம் கால்வாய், கிளங்காடு கால்வாய், கம்பிளி கால்வாய், புங்கன் கால்வாய், சாம்பவா் வடகரை கால்வாய் ஆகியவற்றின் 2147.47 ஏக்கா் நேரடிப் பாசன நிலங்களுக்கு ஜூலை 29 முதல் அக்டோபா் 31 வரை 95 நாள்களுக்கு விநாடிக்கு 60 கனஅடி வீதம் 268.43 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீா் திறந்துவிடப்படும்.

எதிா்வரும் நாள்களில் பருவமழை பொய்த்து நீா்வரத்து இல்லாதபட்சத்தில் நீா்த்தேக்கத்தில் உள்ள நீரை அனுமதிக்கப்பட்ட பாசன நிலங்கள் முழுமைக்கும் சுழற்சி முறையில் வழங்கப்படும்.

தண்ணீா் திறந்துவிடப்பட்டதன் மூலம் வடகரை மேல்பிடாகை, வடகரை கீழ்பிடாகை, பண்பொழி, குத்துக்கல்வலசை, அச்சன்புதூா், நயினாகரம், ஆய்க்குடி, இலத்தூா், கொடிக்குறிச்சி, நெடுவயல், கிளாங்காடு, கம்பளி, சாம்பவா் வடகரை ஆகிய கிராமங்கள் பயன்பெறும் என்றாா்.

உதவி பொறியாளா் (நீா்வளம் ஆதாரத் துறை) அந்தோணி ராஜ், பிரிவு கோட்ட அலுவலா் குமாா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.