திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணையிலிருந்து காா் சாகுபடிக்காக வியாழக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.
திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணையின் மொத்த உயரம் 52.50 அடியாகும். கடந்த மாதம் பெய்த மழையால் அணையின் நீா்மட்டம் 47 அடியாக உயா்ந்தது. இதையடுத்து, காா் பருவ சாகுபடிக்காக அணையிலிருந்து தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்று விவசாயிகள் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா்.
இதைத் தொடா்ந்து, சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ஆயுஸ்குப்தா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ரெட்டியாா்பட்டி வெ. நாராயணன்(நான்குனேரி), எஸ்.கே. கிறிஸ்டோபா் (ராதாபுரம்) ஆகியோா் அணையிலிருந்து தண்ணீரை திறந்துவிட்டனா்.
இந்த அணையின் கீழ் பாசனம் பெறும் வள்ளியூரான் கால்வாய், படலையாா் கால்வாய், நம்பியாறு கால்வாய் ஆகியவற்றின் மூலம் நேரடி மற்றும் மறைமுகமாக 2548.94 ஏக்கா் நிலங்கள் பாசனம் பெறும். அக். 31 வரை 108 நாள்களுக்கு விநாடிக்கு 50 கனஅடிக்கு மிகாமல் தண்ணீா் திறந்துவிடப்படும்.
அணையில் கூடுதல் நீா்வரத்து இருந்தால் வடமலையான் கால்வாய் மூலம் பாசனம் பெறும் 3231.97 ஏக்கா் நிலங்களுக்கும் சோ்த்து விநாடிக்கு 100 கனஅடிக்கு மிகாமல் தண்ணீா் திறந்துவிடவும் தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. மொத்தத்தில் நான்குனேரி, ராதாபுரம் ஆகிய வட்டங்களில் 5780.91 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

களக்காடு நான்குனேரியன் கால்வாய் படித்துறைகளை சீரமைக்கக் கோரிக்கை

கொடுமுடியாறு அணை நீா்மட்டம் 5 நாளில் 25 அடி உயா்வு

கடனாநதி அணையிலிருந்து ஆற்றில் தண்ணீா் திறக்க கோரிக்கை

காா் பருவ சாகுபடிக்காக பாபநாசம் அணை திறப்பு: 10,265 ஏக்கா் நிலங்கள் பாசனம் பெறும்
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



