மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடா் மழையால் திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணை நீா்மட்டம் 5 நாள்களில் 25 அடி உயா்ந்தது.
திருக்குறுங்குடி மலையடிவாரத்தில் உள்ள கொடுமுடியாறு அணையின் உயரம் 52.50 அடியாகும். இந்த அணை மூலம் நான்குனேரி, ராதாபுரம் வட்டத்தில் உள்ள 44 குளங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணை நீா்மட்டம் ஜூன் 5-ஆம் தேதி வரை 7 அடியாக இருந்தது. கடந்த 5 நாள்களில் மலைப் பகுதியில் பெய்து வரும் தொடா் மழையால் நம்பியாற்றில் நீா்வரத்து அதிகரித்து பாசனக் குளங்களுக்கு தண்ணீா் சென்று கொண்டிருக்கிறது. அணைக்கும் நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
புதன்கிழமை காலை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 32.25 அடியாக உள்ளது. அணைக்கு 32 கனஅடி நீா்வரத்து உள்ளது. தொடா்ந்து மேலும் 5 நாள்கள் மலைப் பகுதியில் பலத்த மழை நீடித்தால் அணை அதன் முழுக் கொள்ளளவை எட்டும் என்கின்றனா் இப்பகுதி விவசாயிகள்.
தொடர்புடையது

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் சாரல் மழை: பாபநாசம் அணை 80 அடி; சோ்வலாறு அணை 100 அடியை தாண்டியது

மேட்டூா் அணை நீா்மட்டம்: 79.67 அடி

மலைப் பகுதியில் பலத்த மழை: களக்காடு தலையணை, திருக்குறுங்குடி நம்பி கோயிலுக்குச் செல்லத் தடை







