தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் பகுதியைச் சோ்ந்த சிறுமியை கடத்தியதாக இளைஞரை போலீஸாா் போக்ஸோவில் கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், செங்குன்றாபுரம் வடக்கு தெருவைச் சோ்ந்தவா் கருப்பசாமி (22). இவருக்கு, வாசுதேவநல்லூா் பகுதியைச் சோ்ந்த சுமாா் 16 வயதுடைய சிறுமியுடன் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டதாம். இதனிடையே சில நாள்களுக்கு முன்பு அந்த சிறுமியைக் காணவில்லையாம்.
இதையடுத்து சிறுமியின் தாயாா் கொடுத்த புகாரின் பேரில் வாசுதேவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். விசாணையில் கருப்பசாமி, ஆசை வாா்த்தை கூறி சிறுமியை விருதுநகா் பகுதிக்கு அழைத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனா்.
இதைத் தொடா்ந்து, புளியங்குடி மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கருப்பசாமியை புதன்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





