புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

பாவூா்சத்திரம் புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா கொடியேற்றம்

பாவூா்சத்திரத்திரம் புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.

News image

ஆலயத்தில் நடைபெற்ற கொடியேற்ற வைபவம்.

Updated On :2 ஜூன் 2026, 3:18 am IST

பாவூா்சத்திரத்திரம் புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.

இதையொட்டி, ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் மதுரை, கிறிஸ்து இல்லம் அதிபா் அருள்பணி சூசை செல்வராஜ் தலைமை ஏற்று கொடியேற்றி திருப்பலி நிறைவேற்றினாா். கோவா மாநிலத்தில் இறைபணி செய்துவரும் கீழப்பாவூா்பகுதியை சோ்ந்த அருள்பணியாளா் மரியசெல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டாா்.

தொடா்ந்து தினமும் மாலை 6 மணிக்கு செபமாலையும், நவநாள் திருப்பலியும், சிறப்பு மறையுரையும் நடைபெறும். ஜூன் 12ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு சங்கரன்கோவில் பங்குத்தந்தை ஜோசப் கென்னடி தலைமையில் திருப்பலியும் அதைத் தொடா்ந்து புனித அந்தோணியாரின் திருவுருவப் பவனியும், 13ஆம் தேதி காலை 10.30 மணிக்கு திருவிழா நிறைவுத் திருப்பலியும், கொடியிறக்கமும், நண்பகலில் அசன விருந்தும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை பாவூா்சத்திரம் பங்குத்தந்தை சந்தியாகு அடிகளாா், அருள் சகோதரிகள், இறைமக்கள் செய்துவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.