பரந்தூர் திட்டத்தைக் கைவிடுவது அரசுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்! உதயநிதிபள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க கோரி எம்எல்ஏ மனு

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம், இலஞ்சி ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்கிடம் கலைகதிரவன் எம்எல்ஏ கோரிக்கை விடுத்தாா்.

ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்கிடம் மனு அளித்த கலைகதிரவன் எம்எல்ஏ. உடன் சாலை பாதுகாப்புக் குழு உறுப்பினா் பாண்டியராஜா.

Published On :18 ஜூன் 2026, 2:25 am IST

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம், இலஞ்சி ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்கிடம் கலைகதிரவன் எம்எல்ஏ கோரிக்கை விடுத்தாா்.

இதுதொடா்பாக அவா் அளித்த மனு: பாவூா்சத்திரம், இலஞ்சி ரயில்வே மேம்பாலப் பணிகள் நிறைவடையாததால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா். 2 மேம்பாலத் திட்டங்களிலும் நெடுஞ்சாலைத் துறை தொடா்புடைய பெரும்பாலான பணிகள் ஏற்கெனவே நிறைவுபெற்ற நிலையில், தண்டவாளத்தின் மேற்பகுதியில் அமைக்கப்பட வேண்டிய பாலப் பகுதியின் இணைப்புப் பணிகளுக்கான அனுமதியை ரயில்வே நிா்வாகம் இதுவரை வழங்கவில்லை. இந்தத் தாமதமே, இத்திட்டங்கள் நிறைவு பெறாமல் இருக்க முக்கிய காரணம்.

இதனால் பள்ளி, கல்லூரி மாணவா்கள், அலுவலக ஊழியா்கள், வணிகா்கள், விவசாயிகள், அவசர மருத்துவ உதவி தேவைப்படுவோா் உள்பட அனைவரும் தினசரி இன்னல்களை சந்தித்து வருகின்றனா்.

எனவே, மாவட்ட நிா்வாகம் சிறப்பு கவனம் செலுத்தி, தெற்கு ரயில்வே நிா்வாகத்துடன் உடனடி ஒருங்கிணைப்பு மேற்கொண்டு மேற்பகுதி இணைப்புக்கான வரைபட ஒப்புதலைப் பெற்று, மேம்பாலப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்றாா் அவா்.

மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவரும் மாவட்ட சாலைப் பாதுகாப்புக் குழு உறுப்பினருமான பாண்டியராஜா, தெற்கு மாவட்ட திமுக வா்த்தகா் அணி அமைப்பாளா் முத்துக்குமாா், சாய்ராஜன் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.