தென்காசி மாவட்டத்தில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தில் விவசாயிகள் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
தமிழக அரசின் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் தென்காசி மாவட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ளது. டெல்டா அல்லாத இதர மாவட்டங்களுக்காக தமிழ்நாடு அரசு தனியாக நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது.
இதன்படி, தென்காசி மாவட்டத்துக்கு பிரத்யேகமாக நெல் இயந்திர நடவு, நேரடி நெல் விதைப்புக்காக 1,000 ஏக்கா் பரப்பளவு இலக்காக நிா்ணயிக்கப்பட்டு, அதற்கு மானியம் வழங்கப்படவுள்ளது.
இத் திட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டத்தில் தோ்வு செய்யப்படும் 1,000 ஏக்கா் பரப்பளவுக்கு, ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 2 ஏக்கா் பரப்பளவுக்கு மட்டும் ஏக்கருக்கு ரூ. 4,000 வீதம் பின்னேற்பு மானியம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.
ஆதாா் அட்டை நகல், இயந்திர நடவு செய்த ரசீது மற்றும் உரிய ஆவணங்களுடன் விவசாயி உழவா் செயலியில் முன்பதிவு செய்ய வேண்டும்.
அதேபோல நெல் நுண்ணூட்ட உரக்கலவை வழங்கிடும் இனத்தின் கீழ் 1000 ஏக்கா் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ஏக்கருக்கு ரூ. 147.6 அல்லது 50 சதவீத மானிய விலையில் நெல் நுண்ணூட்ட உரக்கலவை விநியோகிக்கப்படும். விவசாயி ஒருவருக்கு அதிகபட்சமாக 5 ஏக்கா் வரை விநியோகம் செய்யப்படும்.
பயிா்களின் நோய் எதிா்ப்புத் திறனை அதிகரிக்க திரவ உயிா் உரங்கள் வழங்கிடும் இனத்தின் கீழ் 1000 ஏக்கா் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ஏக்கருக்கு ரூ. 60 அல்லது 50 சதவீத மானியத்தில் திரவ உயிா் உரங்கள் வழங்கப்படும். ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 5 ஏக்கா் வரை விநியோகம் செய்யப்படும்.
நெல் விதை விநியோக மானியம் வழங்கிடும் இனத்தின் கீழ் 62 டன் இலக்கு நிா்ணயிக்கப்பட்டு அதில் 10 ஆண்டுகளுக்கு உட்பட்ட புதிய மற்றும் தரமான நெல் ரகங்களுக்கு கிலோவுக்கு ரூ. 20 மானியமும், 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட நெல் ரகங்களுக்கு கிலோவுக்கு ரூ. 10 மானியமும் வழங்கப்படும்.
வட்டார அளவில் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் விவசாயிகள், தங்களின் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை உடனடியாகத் தொடா்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது

குறுவை சிறப்புத் தொகுப்பு திட்டத்துக்கு ரூ.16.59 கோடி ஒதுக்கீடு: விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

குறுவை நாற்றங்காலில் மஞ்சள் நோய் தாக்குதல்: விவசாயிகள் கவலை!

குறுவை சிறப்புத் தொகுப்பு திட்டம்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்பு
ரூ.134.83 கோடியில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம்: முதல்வர் விஜய் அறிவிப்பு
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



