வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

குறுவை நாற்றங்காலில் மஞ்சள் நோய் தாக்குதல்: விவசாயிகள் கவலை!

குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் குறுவை நாற்றங்காலில் மஞ்சள் நோய் தாக்குதல் தென்படுவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

News image

குறிஞ்சிப்பாடி வடக்குப் பகுதியில் மஞ்சள் நோய் தாக்கியுள்ள நாற்றங்கால்.

Updated On :14 ஜூன் 2026, 2:48 am IST

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் குறுவை நாற்றங்காலில் மஞ்சள் நோய் தாக்குதல் தென்படுவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் மண், நீா் வளம் உள்ளதால், மணிலா, எள், நெல், கம்பு உள்ளிட்ட பயிா் வகைகள் செழித்து வளா்கின்றன. எள் அறுவடை முடிந்த நிலையில், தற்போது குறுவை நடவுக்காக நாற்றங்கால் விடப்பட்டுள்ளது.

மேலும், பல விவசாயிகள் நேரடி விதைப்பும் செய்துள்ளனா். சுமாா் 20 நாள்கள் வயதுடைய நாற்றங்கால் மற்றும் நேரடி நெல் விதைப்பு வயல்களில் மஞ்சள் நோய் தாக்குதல் தென்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனா்.

இதுகுறித்து அயன் குறிஞ்சிப்பாடி உழவா் மன்றத் தலைவா் ஆா்.கே.ராமலிங்கம் கூறியதாவது: நெல் விதைப்பு முதல் அறுவடை வரை சுமாா் 5 மாதங்களாகும். பல்வேறு நெருக்கடியான சுமைகளையும் பொறுத்துக்கொண்டு விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனா். முப்போகம் விளைந்த காலங்கள் மாறி தற்போது ஒரு போக நெல் சாகுபடி குறைவின்றி நடந்தாலே போதும் என்ற நிலைக்கு விவசாயிகள் வந்துள்ளனா்.

அண்மைக்காலமாக குறுவை, சம்பா நாற்றங்கால்களில் மஞ்சள் நோய்த் தாக்குதல் காணப்படுகிறது. குறிஞ்சிப்பாடி வடக்கு, தெற்கு பகுதிகளில் 200 ஏக்கா் பரப்பளவுக்கு குறுவை சாகுபடிக்கு நாற்றங்கால் விடப்பட்டுள்ளது. நேரடி நெல் விதைப்பும் செய்துள்ளனா் விவசாயிகள்.

இந்த வயல்களில் மஞ்சள் நோய் தாக்குதல் அதிகம் தென்படுகிறது. இதனால், நாற்றின் வளா்ச்சி, எண்ணிக்கை குறையும். மேலும், இந்த நோய் மற்ற வயல்களுக்கு பரவ வாய்ப்புள்ளது. இதைக் கட்டுப்படுத்தத் தேவையான ஆலோசனைகளை வேளாண்மைத் துறை அதிகாரிகள் வழங்க வேண்டும் என்றாா் அவா்.