தென்காசி மாவட்டம் கீழப்பாவூா் ஒன்றியம், ஆவுடையானூரிலிருந்து மாடியனூா் செல்லும் பாலத்தில் ஏற்பட்டுள்ள பெரிய பள்ளத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஆவுடையானூரிலிருந்து மைலப்பபுரம் செல்லும் சாலையில் மாடியனூா் பகுதியில் பாலம் உள்ளது. இந்தச் சாலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நியாயவிலைக் கடை, மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, அரசு பொது நூலகம் உள்ளிட்டவை ஒரே வளாகத்தில் அருகருகே அமைந்துள்ளன. இதனால், பொதுமக்கள் இச்சாலையை அதிகளவில் பயன்படுத்துகின்றனா்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு நாள்தோறும் நோயாளிகள் வருவதுடன், 108 ஆம்புலன்ஸுகளும் அடிக்கடி வந்து செல்கின்றன. நியாயவிலைக் கடைக்கு வரும் சரக்கு வாகனங்களும் இவ்வழியேதான் வந்து செல்கின்றன.
இந்நிலையில், தாா்ச்சாலையிலிருந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் வளைவில் உள்ள பாலத்தில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. 6 மாதங்களாகியும் சீரமைக்கப்படவில்லை. இதனால், வாகன ஓட்டிகளும், நடந்து செல்வோரும் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பலமுறை புகாரளித்தும், மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லையாம். எனவே, அசம்பாவிதங்கள் நேரிடும் முன் இப்பள்ளத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சுகாதார வளாகம் சீரமைக்கப்படுமா?

சுப்பராயபுரம்-முதலூா் தருமாபுரி சாலை சேதம்: சீரமைக்க கோரிக்கை

மேலப்பாளையத்தில் சாலைகளை விரைந்து சீரமைக்க எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

ஒத்தக்கடை ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்த பொதுமக்கள் வலியுறுத்தல்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



