சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

சுகாதார வளாகம் சீரமைக்கப்படுமா?

தேனி அருகே முத்துதேவன்பட்டியில் சேதமடைந்த சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

News image

முத்துத்தேவன்பட்டி முருகன்கோயில் தெருவில் சேதமடைந்த சுகாதார வளாகத்தின் கழிவுநீா்த் தொட்டி.

Updated On :19 ஜூன் 2026, 6:41 am IST

தேனி அருகே முத்துதேவன்பட்டியில் சேதமடைந்த சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தேனி மாவட்டம், வீரபாண்டி பேரூராட்சியில் 15 வாா்டுகள் உள்ளன. இங்கு சுமாா் 17 ஆயிரம் போ் வசித்து வருகின்றனா். இந்த பேரூராட்சியின் கட்டுப்பாட்டில் முத்துத்தேவன்பட்டி முருகன் தெருவில் 15 ஆண்டுகளுக்கு முன்பு, சுகாதார வளாகம் கட்டப்பட்டு, அதை இந்தப் பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனா்.

இதனிடையே சுகாதார வளாகம் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதேபோல, இங்குள்ள கழிவுநீா்த் தொட்டியும் சேதமடைந்துள்ளது. இதுகுறித்து பேரூராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சுகாதார வளாகம், தொட்டியை சீரமைக்க வேண்டுமென அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.