தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

வெள்ளக்கோவிலில் சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை

வெள்ளக்கோவிலில் சேதமடைந்துள்ள பிரதான சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

சேதமடைந்துள்ள வெள்ளக்கோவில்-காங்கயம் சாலை.

Updated On :7 ஜூன் 2026, 1:52 am IST

வெள்ளக்கோவிலில் சேதமடைந்துள்ள பிரதான சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வெள்ளக்கோவில்-காங்கயம் தேசிய நெடுஞ்சாலையில் பழைய பேருந்து நிலையத்தை அடுத்த பெட்ரோல் பங்க் அருகில் தாா் சாலை சேதமடைந்துள்ளது. ஏராளமான வாகனங்கள் பயணிக்கும் இந்த சாலையில், பல்வேறு இடங்களில் குழிகள் ஏற்பட்டுள்ளன.

இதை அறியாமல் வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனா். பலா் கீழே விழுந்து காயமடைந்துள்ளனா். சாலையை உடனடியாக சீரமைத்து வாகன ஓட்டிகளை விபத்தில் இருந்து காக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.