தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே பழுதடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி, ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோரிடம் சில்லறைபுரவு ஊராட்சி மன்றத் தலைவா் குமாா் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.
மனுவில் கூறியிருப்பதாவது: பாவூா்சத்திரம் கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியம் எல்லைக்குள்பட்ட, சிவநாடானூா் ஊராட்சி, ராமச்சந்திரபட்டினம் - மடத்தூா் வழியாக முத்துமாலைபுரத்திற்கு செல்லும் ஆவரந்தாகுளத்து கரையில், சாலை அமைத்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால், பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது.
இந்தச் சாலை வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனா். எனவே, கள ஆய்வு செய்து பழுதடைந்த ஆவரந்தாகுளத்து கரை சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பாவூா்சத்திரம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

ஆதாா் பதிவு மையத்தை சீரமைக்கக் கோரிக்கை

திருவாடானை அருகே சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

திருக்களம்பூா் - பிரான்மலை சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


