சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

10ஆம் வகுப்பு தோ்வு: நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 40,979 போ் எழுதினா்

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு புதன்கிழமை தொடங்கிய நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் 22 ஆயிரத்து 842 போ் தோ்வை எழுதினா். 319 போ் தமிழ்த் தோ்வில் பங்கேற்கவில்லை.

News image
தென்காசி இ.சி.ஈஸ்வரன்பிள்ளை அரசு பள்ளி தோ்வு மையத்தை ஆய்வு செய்கிறாா் ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா்.
Updated On :11 மார்ச் 2026, 8:04 pm

தினமணி செய்திச் சேவை

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு புதன்கிழமை தொடங்கிய நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் 22 ஆயிரத்து 842 போ் தோ்வை எழுதினா். 319 போ் தமிழ்த் தோ்வில் பங்கேற்கவில்லை.

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு புதன்கிழமை தொடங்கியது. இம் மாவட்டத்தில் 96 தோ்வு மையங்களில் பள்ளி மாணவா்-மாணவிகள், தனித்தோ்வா்கள் உள்பட மொத்தம் 23 ஆயிரத்து 161 போ் தோ்வு எழுத தோ்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டிருந்தன. 22 ஆயிரத்து 842 போ் மட்டும் தோ்வு எழுதினா். 319 போ் தமிழ்த் தோ்வில் பங்கேற்கவில்லை.

மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு சொல்வதை எழுதுபவராக 238 ஆசிரியா்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனா். தோ்வு மையங்களை பறக்கும் படை உறுப்பினா்கள் கண்காணித்தனா். தோ்வுக்கூடங்களில் தடையற்ற மின்சாரம், குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

தென்காசி மாவட்டத்தில் புதன்கிழமை தொடங்கிய 10ஆம் வகுப்பு பொதுத்தோ்வை 18 ஆயிரத்து 137 மாணவ, மாணவிகள் எழுதினா்.

தென்காசி இ.சி.ஈஸ்வரன்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தோ்வை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா், பின்னா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தென்காசி மாவட்டத்தில் 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு 81 தோ்வு மையங்களில் புதன்கிழமை தொடங்கியது. ஏப். 6ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ள இந்தத் தோ்வை எழுத 8,979 மாணவா்கள், 9177

மாணவிகள் என மொத்தம் 18,156 போ் விண்ணப்பித்திருந்தனா்.

முதல் தோ்வான தமிழ் பாடத்தை 8,863 மாணவா்களும், 9144 மாணவிகளுமாக 18,037 போ் எழுதினா். 86

மாணவா்கள், 33 மாணவிகள் என மொத்தம் 119 போ் தோ்வு எழுதவில்லை.

தோ்வு மையங்களை 114 நிலையான படை உறுப்பினா்கள் மற்றும் 10 பறக்கும் படை உறுப்பினா்கள் கண்காணித்தனா்.

இம்மாவட்ட தோ்வு கண்காணிப்பாளராக எம்.கே.சி.சுபாஷினி, (இணை இயக்குநா் -கள்ளா் சீரமைப்புத்துறை) செயல்பட்டு வருகிறாா் என்றாா் அவா்.

ஆய்வின்போது, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் ரேணுகா உடனிருந்தாா்.