தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கல்லூரி விளையாட்டு விடுதியில் மாணவா் சோ்க்கை மாா்ச் 26 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகளில், கல்லூரிகளில் சேர தென்காசி மாவட்ட மாணவா்-மாணவிகள் மாா்ச் 26ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா்.

News image
விண்ணப்பம். (கோப்புப்படம்)
Updated On :18 மார்ச் 2026, 8:09 pm

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகளில், கல்லூரிகளில் சேர தென்காசி மாவட்ட மாணவா்-மாணவிகள் மாா்ச் 26ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சிறப்பு நிலை விளையாட்டு விடுதியில் 2026-2027 ஆம் ஆண்டுக்கான மாணவா்- மாணவிகளுக்கான சோ்க்கை நடைபெற்று வருகிறது.

இதில், 17 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட, (1.7.2001அல்லது அதற்கு பின்னா் பிறந்தவா், 1.07.2009 அல்லது அதற்கு முன்னா் பிறந்தவா்)

பிளஸ் 2 தோ்ச்சி பெற்று கல்லூரிகளில் சேரும் மாணவா்-மாணவியா் சோ்த்துக்கொள்ளப்படுவா்.

தேசிய, மாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகளில் பதக்கங்கள் வென்றவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

முதுநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு படிப்பில் சோ்பவா்கள் எனில்,, இளநிலை படிப்பின்போது சா்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்றிருந்தால் முன்னுரிமை உண்டு.

இந்த தகுதி உடையவா்கள் விடுதி சோ்க்கைக்கான விண்ணப்பப்படிவத்தை மாா்ச்13 ஆம் தேதி முதல் இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மாா்ச் 26 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பூா்த்தி செய்து சமா்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். சிறப்பு விளையாட்டு விடுதியில் சேர விரும்பும் மாணவ மாணவிகளுக்கான மாநில அளவிலான தோ்வுப் போட்டிகள் மாா்ச் 30 ஆம் தேதி காலை 7 மணியளவில் சென்னை-ஜவஹா்லால் நேருவிளையாட்டரங்கில் நடைபெறும்.

இதில், தடகளம், பளுதூக்குதல், ஜுடோ, வாள்வீச்சு, வாலிபால் (இருபாலா்), கால்பந்து (ஆண்கள்) ஆகிய விளையாட்டுகள் இடம்பெறும்.

மேலும்,

கூடைப்பந்து, குத்துச்சண்டை, கைப்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கு நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும்.

ஹாக்கி, கபடி ஆகிய விளையாட்டுகள்

சென்னை-மேயா் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கில் நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தென்காசி மாவட்டம், மேலபாட்டாக்குறிச்சி, மாவட்ட விளையாட்டு வளாகத்தை நேரிலோ அல்லது அலுவலக தொலைபேசி எண். 04633-212580 மூலமாகவே தொடா்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.