சிவ நாடார் பல்கலைக்கழகத்தில் பிடெக் உள்ளிட்ட இளநிலை பட்டப்படிப்பில் சேர்க்கை பெற விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
முன்கூட்டியே நுழைவுத் தேர்வு அட்டவணை வெளியாகியிருந்ததால், அதில் ஏப்ரல் 23ஆம் தேதியும் நுழைவுத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அன்றைய தினம் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்பதால், அன்று நடைபெறவிருந்த நுழைவுத் தேர்வு ஏப்ரல் 30ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 23ஆம் தேதி காலை மற்றும் மாலையில் நடைபெறும் நுழைவுத் தேர்வுகள் அப்படியே ஏப்ரல் 30ஆம் தேதி பல்கலைக்கழகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நுழைவுத் தேர்வுகள் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அடுத்து ஏப்ரல் 25, 30 மற்றும் மே 2 மற்றும் 9ஆம் தேதிகளில் நடைபெறவிருக்கிறது.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, வேலூர், பெங்களூரு, ஹைதராபாத், விஜயவாடா, தில்லி உள்ளிட்ட நகரங்களில் நுழைவுத் தேர்வுகள் நடைபெறுகின்றன. நுழைவுத் தேர்வு நடைபெறும் 13 நாள்களுக்கு முன்புவரை விண்ணப்பிக்கலாம். தேர்வு தேதியை மாணவர்களே தேர்வு செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைசி நேரத்துக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது. எனவே, ஒவ்வொரு நுழைவுத்தேர்வுக்கும் எத்தனை பேர் அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதையும் அறிந்து கொண்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்று வெளியாகுமா சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்? முழு விவரம்!

ஏப்ரல் 20ம் தேதி சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்?

10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?
ஐஐஎஸ்இஆர் நுழைவுத் தேர்வு! பிளஸ் 2 மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


