சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் 10ஆம் வகுப்பு படித்து 2027ஆம் ஆண்டில் பொதுத் தேர்வெழுதும் மாணவர்களுக்கான தேர்ச்சி விதியை நிர்வாகம் கடுமையாக்கியருக்கிறது.
அதன்படி, எழுத்துத் தேர்வு மற்றும் வகுப்பு உள்மதிப்பீடு என இரண்டு முறையிலும் மாணவர்கள் 33 சதவிகித மதிப்பெண் பெற்றிருந்தால் மட்டுமே 10ஆம் வகுப்பில் தேர்ச்சி என்று அறிவிக்கப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
தற்போது, மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்கு பொதுத் தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் 80 மதிப்பெண்களுக்கு குறைந்தபட்சம் 26.5 மதிப்பெண்களும், அக மதிப்பீட்டில் 20க்கு 6.6 மதிப்பெண்களும் பெற வேண்டும் என்பது விதியாக உள்ளது. இந்த விதி 2027ஆம் ஆண்டுமுதல் மாற்றப்படுகிறது.
அதாவது, 2026ஆம் ஆண்டில் பொதுத் தேர்வெழுதியிருக்கும் மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திலும் ஒட்டுமொத்தமாக 33 சதவிகிதம் மதிப்பெண்களைப் பெற வேண்டும். 80 மதிப்பெண்களுக்கான எழுத்துத் தேர்வு மற்றும் பள்ளிகளால் நடத்தப்படும் 20 மதிப்பெண்களுக்கான அகமதிப்பீடு தேர்வு என இரண்டு மதிப்பெண்களில் ஒன்றில் தகுதி மதிப்பெண் குறைந்தாலும், மற்றொன்றில் நல்ல மதிப்பெண் எடுக்கும்போது, அந்தப் பாடத்தில் ஒட்டுமொத்த தேர்ச்சி உறுதி செய்யப்படும். சில பாடங்களில், பொதுத் தேர்வு மற்றும் அகமதிப்பீட்டின் விகிதம் 70:30 ஆகவும் இருக்கும்.
சிபிஎஸ்இ கடந்த வாரம் 2026-27 கல்வியாண்டிற்கான இடைநிலைப் பள்ளிப் பாடத்திட்டத்தை அறிவித்தது. அதில், பாடத்திட்டம் மற்றும் மதிப்பீட்டில் உள்ள மாற்றங்கள் குறித்த விவரங்கள் வெளியாகியிருந்தன.
அதில், பத்தாம் வகுப்பு மாணவர்களின் அக மதிப்பீடு என்பது பள்ளிகளால் நடத்தப்படும் பருவக்காலத் தேர்வுகள், பிராஜெக்ட்டுகள், பாடம் குறித்த ரெக்கார்டு பணிகளில் அவர்களின் செயல்திறனின் அடிப்படையில் ஆசிரியர்களால் வழங்கப்படும்.
எனவே, ஒரு பாடத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட, ஒரு மாணவர், பரிந்துரைக்கப்பட்ட திட்டத்தின்படி, அக மதிப்பீடு மற்றும் பொதுத் தேர்வு மதிப்பெண்களின் கூட்டுத் தொகையிலும், தனித்தனியாகவும் குறைந்தபட்சம் 33 சதவிகித மதிப்பெண்களைப் பெற வேண்டும். முழுமையாக அக மதிப்பீட்டின் மூலம் மதிப்பிடப்படும் பாடங்கள், அவற்றுக்கான வழிகாட்டலின்படி நடத்தப்பட வேண்டும் என்றும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுவரை, அக மதிப்பீட்டு முறையில் 20க்கு மாணவர்கள் பெரும்பாலும் 15 மதிப்பெண்களை பெற்று விடுவார்கள். எனவே, படிக்காத மாணவர்கள் கூட, 80 மதிப்பெண்ணுக்கு நடைபெறும் பொதுத் தேர்வில் 18 மதிப்பெண் எடுத்தால் போதும் என்ற நிலை இருந்தது. ஆனால், இனி, அவ்வாறு செயல்பட முடியாது. எழுத்துத் தேர்விலும் 33 சதவிகித மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பால், மாணவர்கள் சிரமப்பட்டு படிக்க வேண்டும். தோல்வியடையும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.
Summary
CBSE tightens class 10th pass rules
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள்! - நேரலை
10-ஆம் வகுப்பு: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 94.61 சதவீதம் தேர்ச்சி
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! 94.31 % மாணவர்கள் தேர்ச்சி!!

சிபிஎஸ்இ பிளஸ் 2: மொத்த தேர்ச்சி விகிதம் 85.20%
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி




