காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் அனைத்து வகை பள்ளிகளில் 94.61 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் அனைத்து வகை பள்ளிகளில் 94.61 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வெழுதினர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10 ம் வகுப்பு தேர்வு எழுதியவர்கள்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 184 பள்ளிகளை சேர்ந்த 7,604 மாணவர்கள் மற்றும் 7,677 மாணவிகள் என மொத்தம் 15,281 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 7,053 மாணவர்களும், 7,405 மாணவிகளும் என மொத்தம் 14,458 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இதில் மாணவர்கள் 92.75 சதவீதம், மாணவிகள் 96.46 சதவீதம் என மொத்தம் 94.61 சதவீத தேர்ச்சியுடன் மாநில அளவில் 20 ஆவது இடத்தை பிடித்துள்ளது. அதே நேரத்தில் அரசுப் பள்ளிகள் தேர்ச்சி விகிதத்தில் 19 ஆவது இடத்தை பிடித்துள்ளது. நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கையில், அரசுப் பள்ளிகள் 31, தனியார் பள்ளிகள் 57 என மொத்தம் 88 பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
கடந்த ஆண்டு 16-வது இடத்தில் இருந்த காஞ்சிபுரம் மாவட்டம், இந்தாண்டு 20 ஆது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
Summary
Regarding the 94.61% pass rate achieved by students across all types of schools in the Kanchipuram district in the 10th Grade Public Examination results...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









