தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு: திருவள்ளூர் மாவட்டத்தில் 92.75% தேர்ச்சி

திருவள்ளூர் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் 92.75 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளது குறித்து....

News image

திருவள்ளூர் மாவட்டத்தில் 92.75% தேர்ச்சி - கோப்புப்படம்

Updated On :20 மே 2026, 2:55 pm IST

திருவள்ளூர் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் அனைத்து வகை பள்ளிகளில் 92.75 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாநில அளவில் 28 ஆவது இடம் பெற்றுள்ளது

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 20) காலை வெளியாகின. இந்தத் தேர்வில் 94.31 % மாணவ, மாணவிவகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் இந்தாண்டும் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்று தேர்ச்சி விகிதத்தில் முதலிடம் பிடித்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவ, மாணவிகள் 31231 பேர் அனுமதிக்கப்பட்டனர். இதில் மாணவர்கள்-14047, மாணவிகள்-14920 என மொத்தம் 28967 பேர் தேர்ச்சி பெற்றனர்.

மாநில அளவிலான தேர்ச்சி தர வரிசைப் பட்டியலில் திருவள்ளூர் மாவட்டம் 92.75 சதவீதம் பெற்று 28 ஆவது இடம் பெற்றுள்ளது.

Summary

Regarding the 92.75% pass rate achieved by students in the 10th public examinations in the Thiruvallur district...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.